மதுரைத்திட்டம் பற்றிய எனது பதிவில் கஜன் அண்ணா அளித்த பின்னூட்டத்தில் நூலகம் தளம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். கொஞ்சம் உலாவிப் பார்த்தேன். அருமையான தளம் அது. நூலகமானது ஈழத்து இலக்கியங்களை கணணிமணப்படுத்தி ஆவணப்படுத்தும் தன்னார்வ முயற்சி. இதுவரை 3400 ஆவணங்களை கணணிமயப்படுத்தி இருக்கிறார்கள். வெறும் ஈழ்த்து நூல்கள் மட்டுமன்றி இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்களை என ஈழத்து எழுத்தாவணங்களை மின்வடிவாக்கி ஆவணப்படுத்துகின்றனர்.
யாழ்ப்பாண வைபவ மாலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் அண்மைய காலப் படைப்புக்கள் வரை பட்டியல் நீழ்கிறது. மதுரைத்திட்டத்தை விட அதிக நூல்களை ஆவணப்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து நூல்களையும் PDF கோப்பாக இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ள முடியும். இப்போது ஈழத்து நூல்களையும் சுவைக்கும் வாய்ப்பும் எம்மவருக்குக் கிட்டியிருக்கிறது. எங்களுடைய பழைய இதழ்களை குறிப்பாக எங்கள் தாய் தந்தையர் வாசித்து மகிழ்ந்த சிரித்திரன் போன்ற இதழ்களை பார்க்கும் வாய்ப்பையும் இது எனக்கு ஏற்படுத்தித் தந்ததில் மெத்த மகிழ்ச்சி. இன்று உப்புச் சப்பில்லாத சினிமாவை மையப்படுத்திய வணிக நோக்கமுடைய தென்னிந்திய இதழ்களுடன் ஒப்பிடுகையில் எம்மவரது படைப்புக்கள் மிக்கத் தரமானவையாக இருந்திருக்கின்றன. இன்னும் ஆயிரம் இதழ்கள் நூலகத்திலுண்டு - நான் வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.
நீங்களும் வாசிக்க விரும்பினால், சொடுக்குங்கள் http://www.noolaham.org/
புத்தகங்கள் படிப்பது எனது மிக முக்கிய பொழுதுபோக்கு. இரவில் ஏதாவது ஒரு புத்தகமாவாது வாசிக்காவிட்டால் தூக்கம் வராது, இவ்வளவு ஏன் இயற்கைக் கடன் கழிப்பின் போதும் எனது துணை புத்தகம் அல்லது பத்திரிகை தான். 10ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது நான் றோயல் கல்லூரி விவாத அணியில் இடம்பெற்றிருந்தேன். அணிப் பயிற்சியின் ஒரு பகுதியாக இலக்கியங்களைப் படித்தல் கட்டாயமானதாக இருந்தது. நாலைந்து தடவை படிக்காது “எஸ்கேப்” ஆக முயற்சி செய்திருந்தேன், ஆனால் அவர்கள் விடவில்லை. படிக்க வேண்டிய இலக்கிய நூல்களின் பட்டியல் என்னிடம் தரப்பட்டது. அகநானூறு, புறநானூறு முதல் கம்பராமாயணம், பாரதி பாடல்கள் என நீண்டது பட்டியல். சாதாரணமாக நான் நூலகங்களில் புத்தகங்கள் எடுத்துப் படிப்பதில்லை, எந்தப் புத்தகமானாலும் வாங்கிப் படிப்பது தான் வழக்கம். இதற்கு பெரிய காரணம் ஒன்றுமில்லை நூலகங்களில் எடுக்கும் புத்தகங்களைச் சரியாகத் திருப்பித் தர மறந்து விடுவேன் - எதற்கு வீண் சிக்கல் என நான் புத்தகங்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். ஆனால் இந்தப் பெரிய பட்டியலை வாங்கிப் படிக்கும் நிலையில் நானில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பாடசாலை நூலகத்திலும், கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்திலுமாக ஒருவாறு தேடிப்பிடித்து தேவையானவற்றைக் குறிப்பெடுத்துக்கொண்டேன் இதெல்லாம் நடந்தது 2004ல்.- இப்படியாகத்தான் பழந்தமிழ் இலக்கியங்களைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் உருவானது. 2007ல் விவாத அணித்தலைவனாக ஆன பின்பு அப்போது இணைந்த புது முகங்களுக்கும் இதே பயிற்சியை வழங்கிய போது அவர்கள் நூல்களைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர் நோக்கினார்கள் - ஆனால் என்ன செய்ய இலகுவான வேறு தீர்வுகள் இருக்கவில்லை.
“எங்களால் மாற்ற முடியும்” எனச்சொல்லிக்கொண்டொருவர் பதவிக்கு வந்த கதை உலகறிந்ததே. அவரது பேச்சும், துணிச்சலும் உலக மக்களையே திரும்பிப் பார்க்க வைத்தது. உலக வல்லரசின் தலைவராக ஒரு ஈரநெஞ்சமுடையவர் வரவிருக்கிறார் எல்லாக் கொடுமைகளும் மாறப்போகிறது என அந்த வல்லரசின் பிடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளெல்லாம் கனாக்கண்டன....
சும்மா பொழுதுபோக்கா தொடங்குற விஷயங்களெல்லாம் மிக மிக சீரியஸான விஷயங்களா மாறிவிடுவதை நாம் அடிக்கடி கண்டிருக்கின்றோம். ஹாவர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் சும்மா பொழுதுபோக்கா தொடங்கிய “வதனவேடு” - அதுதான் facebook ஐ தமிழில் சொன்னேன் இப்போது மிக முக்கியமான சமூக வலைப்பின்னலாகிவிட்டது. அதை விடுங்கோ - இங்கு நான் எழுத வந்தது அதைப் பற்றியல்ல - விளையாட்டைப் பற்றித் தான்.
வாழ்கையில் எல்லாமே இலவசமாகக் கிடைத்தால் எவ்வளவு நலம்? - இப்படி வெட்கமில்லாமல் சொல்லக் கூடிய இனமொன்றும் உலகிலுண்டு. இலங்கைக்கண்மைய தேசமொன்றின் தென் மாநிலமொன்றின் நிலை இதுதான். உலகின் பாரம்பரிய இனக்கூட்டத்தின் தலைநகர் அதுதான், தற்போது அதனாட்சியும் அவ்வினத்தின் சர்வதேசத் தலைவர் எனச் சொல்லிக் கொள்ளும் ஒருவரிடம் தான் இருக்கிறது, இப்படியெல்லாம் இருக்கையிலே அந்த இனம் கேவலப்பட்டுப் போனது ஏன் தெரியுமா? இந்தக் கையேந்திப் பிழைப்பினால் தான்.
ஆனால் இங்கோ கதை வேறு. ஆட்சியைப் பிடிப்பதற்கான சூத்திரமே “இலவசங்களை” அறிவிப்பதுதான். உழைப்பினால் பெற வேண்டிய சௌகரியங்களை “இலவசமாய்” அய்யன் அள்ளி வழங்க, உணவுக்கலைந்த விலங்குகள்போல மக்களும் வாக்களித்தனர். இப்படியாக இலவசம் மேல் இலவசமாக அள்ளி வழங்கி, மானியம் மேல் மானியமாக வழங்கோ வழங்கென்று வழங்கி மக்களை சோம்பேறிகளாக ஆக்கிவிட்டனர். இந்தச் சோம்பலினால் தான் என்னவோ அவர்களுக்கு இன உணர்வு கூட அடங்கிவிட்டது.
ஒரு சின்ன உதாரணம். ஒரு தொலைக்காட்சிப்பெட்டி கூட இல்லாத சாதாரண குடிமகனின் வீடு, அங்கு கணவன், மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருவரும் உழைத்துச் சம்பாதிக்கிறார்கள் - வாழ்க்கையும் சாதாரணமாக போய்ககொணடிருக்கறது. சிறுகச் சிறுகச் சேமித்துச் சேமித்தும், தவணை முறையிலும் சௌகரியங்களைக் கொள்வனவு செய்கிறார்கள். இந்நிலைமையில் இந்த வீட்டில் 4 பேர் உழைக்கிறார்கள். இதே நிலைமையில் அரசாங்கம் இலவசமாகச் சௌகரியங்களையும், மிகக் குறைந்த விலையில் பொருட்களையும், மானியங்களையும் வழங்குமாயின் மனைவிக்கும் ஒரு மகனதும் உழைப்புக்கான அத்தியாவசியத் தேவை இல்லாது போய்விடும் ஆக பொருளாதாரத்திற்கு மக்கள் வழங்கத் தயாரான உழைப்பினளவு குறைய பொருளாதார வளர்ச்சியும் குன்றும் - இது ஒரு பொருயாதார நோக்கு.
எந்தவொரு விளையாட்டுப் போட்டியிலுங்கூட வெற்றிவாகை சூடிய அணி தங்கள் கொண்டாட்டங்களுக்கு முன்பதாக தோல்லியடைந்த அணியினரை வாழ்த்திப் பாராட்டுவது வழக்கம். அது அவர்கள் உணர்வு ரீதியாகப் புண்படாமலிருக்க உதவி புரியும். சரி எதிரிகளுடன் தான் கைகுலுக்க வேண்டாம் நடுவில் நின்று இரசித்த அப்பாவிகளையும் வெறுப்புடன் நோக்குவது சரியா?
ஒத்துக் கொள்கிறோம் “வைரஸ்” தாக்கியவர்களை நீங்கள் வடிகட்ட நினைப்பது நியாயம், ஆனால் அச்செயலில் அப்பாவிகளும் உழலுருவது என்ன நியாயம்? “இது எங்கள் அனைவரினதும் தேசம்” என நீங்கள் உரக்க உரைத்தால் மட்டும் போதாது அதை உணரச்செய்ய வேண்டும். துன்புறுத்துவதால் அதைச் செய்யமுடியாது மேலும் அது வெறுப்புணர்வையும், கசப்புணர்வையுமே மேலோங்கச் செய்யும்.