இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றியும், வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் தீாமானிக்கப்படும் முறைபற்றியும் விளக்கம் தருவதாக இப்பதிவு அமையும்.
இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசின் 1978ம் ஆண்டு முதல் நடைமுறையிலிருக்கும் அரசியல் யாப்பின் 94வது சரத்தும் அதன் உப பிரிவுகளும் நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியொருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பற்றி விபரிக்கின்றது.
Election of the President.
94. (1) At the election of the President every voter while casting his vote for any candidate may-
(a) where there are three candidates for election, specify his second preference ; and
(b) where there are more than three candidates for election, specify his second and third preferences.
(2) The candidate, if any, who receives more than one-half of the valid votes cast shall be declared elected as President
(3) Where no candidate is declared elected under paragraph (2) of this Article, the candidate or candidates, other than the candidates who received the highest and second highest number of such votes, shall be eliminated from the contest, and -
(a) the second preference of each voter whose vote had been for a candidate eliminated from the contest, shall, if it is for one or the other of the remaining two candidates, be counted as a vote for such candidate and be added to the votes counted in his favour under paragraph (2), and
(b) the third preference of each voter referred to in sub-paragraph (a) whose second preference is not counted under that sub-paragraph shall, if it is for one or the other of the remaining two candidates, be counted as a vote for such candidate and be added to the votes counted in his favour under sub-paragraph (a) and paragraph (2),
and the candidate who receives the majority of the votes so counted shall be declared elected as President.
(4) Where an equality is found to exist between the votes received by two or more candidates and the addition of one vote would determine-
(a) which candidate is to be declared elected under this Article ; or
(b) which candidate is not to be eliminated under this Article, then the determination of the candidate to whom such additional vote shall be deemed to have been given for the purpose of such determination shall be made by lot.
//
The above extract from the 1978 Constitution of the Democratic Socialist Republic of SriLanka is taken from The Official Website of the Government of SriLanka. (http://www.priu.gov.lk/Cons/1978Constitution/Chapter_14_Amd.html)
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஒற்றைமாற்று (தனிமாற்று) வாக்கு முறைப்படி நடாத்தப்படும். இதன் பிரகாரம் வாக்காளர்கள் 3 வேட்பாளர்களுக்குக் குறைவாகப் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் தமது முதலாவது மற்றும் இரண்டாவது விருப்பத்தெரிவுகளைக் குறித்து வாக்களிக்கலாம், 3ற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுமிடத்து 3வது விருப்பத்தெரிவையும் சேர்த்து வாக்களிக்கலாம். உதாரணமாக அ,ஆ,இ என 3 நபர்கள் போட்டியிடுமிடத்து வாக்காளர்கள் தாம் விரும்பியவர்களுக்கு முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புவாக்குகளை விருப்ப வரிசையில் அளிக்கலாம்.
வாக்குகளின் எண்ணிக்கையில் முதலாவதாக முதன்மை விருப்பு வாக்குகள் மட்டுமே எண்ணப்படும். அதில் செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50வீதத்திற்கும் அதிகமாக யார் வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார். இலங்கையில் இதுவரை நடந்த சகல ஜனாதிபதித் தேர்தல்களிலும் முதல்விருப்பெண்ணிக்கையிலேயே செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50வீதத்திற்குமதிகமாக வாக்குகளைப்பெற்றே ஜனாதிபதிகள் தெரிவானார்கள்.
ஒருவேளை எந்த வேட்பாளரும் செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50வீதம் அல்லது அதற்கு மேல் பெறாதவிடத்து, முதல் விருப்பு எண்ணிக்கையில் அதிக தொகை வாக்குகள் பெற்ற முதல் இருவர் தவிர்த்த ஏனையோர் போட்டியிலிருந்த நீக்கப்படுவர். இதன் பின்னர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பெற்ற முதல் விருப்பு வாக்குச்சீட்டுக்களிலிருந்து போட்டியிலுள்ள இருவரில் எவர்க்காவது 2ம் விருப்பு வாக்கு இருந்தால் அது அவர்களது வாக்குகளுடன் சேர்க்கப்பட்டு எண்ணப்படும், மேலும் அதன் பின்னும் எஞ்சியுள்ள போட்டியிலிருந்து விலக்கப்பட்டவர்களின் வாக்குகளில் போட்டியிலுள்ள இருவரில் எவர்க்காவது 3ம் விருப்பு வாக்கு இருந்தால் அவையும் அவர்களது வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்பட்டு பெரும்பான்மை (சாதாரண பெரும்பான்மை) வாக்குகள் பெறுபவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
இம்முறையின் பின்னும் இருவரும் சம அளவான வாக்குகள் பெற்றிருந்தால் இருவரில் ஒருவருக்கு மேலதிக வாக்கு ஒன்று வழங்கப்படும் - அந்த வாக்கு யாருக்கு வழங்கப்படும் என்பதை ஒரு லொத்தர் (திருவுளச்சீட்டு) மூலம் தீர்மானிப்பார்கள். அந்த ஒரு வாக்கைப் பெற்றவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
இது தான் 1978லிருந்து இலங்கையில் நடைமுறையிலிருக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 2ம் குடியரசு அரசியலமைப்பின் படியிலான ஜனாதிபதித் தேர்தல் முறை.
வரும் தேர்தல் தொடர்பான அலசல் பதிவு ஒன்றை தயார் செய்து வருகிறேன். விரைவில் பகுதி பகுதியாக பிரசுரிக்கப்படும்.
இவ்விடத்தே அனைவரிடமும் அன்பான வேண்டுகோள் ஒன்றை வைக்கவிரும்புகின்றேன். வாக்கு என்பது நவீன ஜனநாயகத்தின் முக்கிய கருவி. ஜனநாயகத்தின் முதுகெலும்பும் கூட ஆகவே அதை சரியாகப் பயன்படுத்துதல் எமது அனைவரினதும் கடமை. வாக்களிக்காமல் விடுதலோ, வாக்குகளை செல்லுபடியற்றதாக்கலோ எமது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வாகாது. ஆகவே பொறுப்பான குடிமக்களாகச் செயற்படுவோம் - எமது ஜனநாயகக் கடமையைச் சரியாகச் செய்வோம்.