May 20, 2010

இரண்டு நிகழ்வுகளும் அவற்றுக்கான இரண்டு பாடல்களும்!

அண்மை நாட்களாக இரண்டு பாடல்கள் எனது இசைத்தொகுப்பில் தொடர்ந்து ஒலித்த வண்ணமுள்ளது. இவையிரண்டும் இரண்டு வேறுபட்ட நிகழ்வுகளுக்காக இசைக்கப்பட்ட பாடல்கள்.

முதலாவது செம்மொழி மாநாட்டிற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பாடல். “செம்மொழியான தமிழ் மொழியாம்....” என்ற இந்த பாடலை கருணாநிதி தொகுத்துள்ளார் (எழுதியுள்ளார் என்பதில் எனக்குடன்பாடில்லை, ஏனெனில் பல வரிகள் எம்பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்டவையே!) 27 பாடகர்கள் பாடியுள்ளார்கள் மேலும் 15 பேர் பின்னணியில் பாடியிருக்கிறார்கள். 3 தலைமுறை பாடகர்களையும் ஒன்றிணைத்து ரஹ்மான் இந்த பாடலை உருவாக்கியிருக்கிறார். 



பாடியவர்கள்


A. R. ரஹ்மான்
T. M. சௌந்தராஜன்
T. L. மகாராஜன்
P. சுஷீலா  
ஹரிஹரன்
நித்யஸ்ரீ  மகாதேவன்
சின்ன  பொண்ணு
ஸ்ரீநிவாஸ்
ப்ளாஷி  
கார்த்திக்
நரேஷ் ஐயர்  
சின்மயி
சவீதா மோகன்
ஹரிணி
ஸ்ருதி  ஹாசன்
யுவன்  ஷங்கர்  ராஜா
விஜய் யேசுதாஸ்
குணசேகரன்
T. M. கிருஷ்ணன்
அருணா  சாய்ராம்
சௌம்யா
G. V. பிரகாஷ்
ரைஹானா
சுஷீலா ராமன்
காஷ்
பாம்பே ஜெயஸ்ரீ
நாகூர் சகோதரர்கள்


பின்ணனி குரல்கள்

நேஹா
உஜ்ஜைநீ
தேவன்
சரிசி
நிதின் ராஜ்
சகித்
R. விஜய் நாராயண்
DR. நாராயண்
பாக்யராஜ்
சுபிக்ஷா
அனிதா
K. ரேணு
மாயா  ஸ்ரீசரண்
கல்யாணி
ரகீப் ஆலம்

இதோ கருணாநிதி தொகுத்த பாடல் வரிகள் -

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளீர்!

உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்
நன்மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி -
ஓதி வளரும் உயிரான உலகமொழி -
நம் மொழி - நம் மொழி - அதுவே
செம்மொழி - செம்மொழி - நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

நல்ல இசையுடன் பாடல் ஆரம்பிக்கிறது, ஆனால் செம்மொழி மாநாட்டுப் பாடல் என்ற வகையில் இடையிடையே வரும் ரப் வ(இ)சையை தவிர்த்திருக்கலாம். மேலும் தமிழ் வரிகளைப் பாடியதில் சில பிழைகள் என்காதுக்கு எட்டின. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதில் கேளிர் என்பது கேளீர் என்று பாடப்பட்டிருக்கிறது (அல்லது ஒழுங்காகப் பாடப்பட்டிருந்திருந்தாலும் இசைச் சேர்க்கை, effects சேர்க்கையின் பின் கேளீர் என்றே கேட்கிறது.) மேலும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதில் பிறப்பொக்கும் என்பது பிறப்புக்கும் என்றே ஒலிக்கிறது. எமது தமிழ்மொழியின் பெருமை கூறும் வரிகளைப் பிழையாக ஒலிக்கும்படி அமைத்ததில் எனக்கு வருத்தம். மற்றப்படி “வந்தே மாதரம்” அளவிற்கு சிறப்பாக அமையக்கூடிய பாடல் இது. இந்தப் பிழைகளை சீரமைத்து, ரப் வசையை நீக்கிவிட்டால் சிறப்பாக இருக்கும்! இந்த செம்மொழிப் பாடலுக்கு ரப் இசை பொருந்தவில்லை அல்லது பொருத்தமில்லை என்பது என் கருத்து.

இதோ அந்த செம்மொழி மாநாட்டுப் பாடல் :

// 





அடுத்த பாடல் ஃபிஃபா 2010 காற்பந்தாட்ட உலகக்கிண்ணத்தின் Theme பாடல். தென்னாபிரிக்காவில் அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் உலகக்கிண்ணக் காற்பந்தாட்டப்போட்டிகளைப் பிரபலப்படுத்த ஃபிஃபா உலகக்கிண்ணம் தென்னாபிரிக்கா 2010ன் துணை நிறுவனமான கொககோலா நிறுவனம் சோமாலிய-கனேடிய பாடகரான கேனானின் ட்ரௌபடோ என்ற இசைத் தொகுப்பில் இடம்பெற்ற “வேவின் ஃப்ளாக்” என்ற பாடலைத் தெரிவு செய்துள்ளது. அதனை சில மாற்றங்களுடன் கேனான் ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் theme பாடலாக வெளியிட்டிருக்கிறார். ஹிப் ஹொப் வகையைச் சேர்ந்த இப்பாடல் அருமையான மென்மைத் துள்ளலாக இருக்கிறது! கடந்த கிரிக்கெட் உலகக்கிண்ணத்திற்கு ஷகி மற்றும் சில மேற்கிந்தியத்தீவுப் பாடகர்கள் இணைந்து வழங்கிய theme பாடல் போல இதுவும் மிகச்சிறப்பாக இருக்கிறது! கேட்டுப்பாருங்கள் :

//